/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சொத்து தகராறில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
/
சொத்து தகராறில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
சொத்து தகராறில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
சொத்து தகராறில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
ADDED : மே 10, 2025 07:44 AM
தேவதானப்பட்டி: சொத்து பிரச்னையால் வழக்கறிஞர் அழகர்சாமியை அரிவாளால் வெட்டிய வழக்கறிஞர் கதிர்வேல் உட்பட இரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி அய்யர் பங்களாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அழகர்சாமி 38.இவருக்கும், இவரது சித்தப்பா காளிமுத்துவிற்கும் இடையே சொத்து பிரச்னை இருந்தது. இந்நிலையில் உள்ளூர்கோயில் திருவிழாவில் நின்று கொண்டிருந்த அழகர்சாமியை, அங்கு வந்த காளிமுத்து, இவரது மகன் வழக்கறிஞர் கதிர்வேல் 35, ஆகியோர் அரிவாளால் அழகர்சாமியை வெட்டினர். மருத்துவமனைக்கு அழகர்சாமி கொண்டு செல்லப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் காளிமுத்து, கதிர்வேல், இவரது தம்பி அழகர்ராஜா, நண்பர் விஜயகுமார் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, காளிமுத்துவை கைது செய்தனர்.
காளிமுத்து மனைவி சற்குணம் புகாரில், சொத்து பிரச்னை காரணமாக வீட்டிலிருந்த என்னை அழகர்சாமி அரிவாளால் வெட்டினார். இவரது தம்பிகள் கண்ணன், பாலா, நண்பர் நந்தா ஆகியோர் கட்டையால் அடித்து காயப்படுத்தினர். 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.