/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூவரை கத்தியால் குத்திய வழக்கறிஞருக்கு 2 ஆண்டுகள் சிறை; மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

ADDED : அக் 30, 2024 04:59 AM

தேனி : 'பழகிய பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டவரை, தட்டிக்கேட்ட வீட்டுஉரிமையாளர் உட்பட மூவரை கத்தியால் குத்திய வழக்கறிஞர் காளிதாசுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது'.
ஆண்டிபட்டியில் பியூட்டி பார்லர் நடத்தியவர் வைரமணி. இப்பெண் தேனி அய்யனார்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் காளிதாஸிடம் 38, குடும்ப பிரச்னைக்கு தீர்வு பெற தொடர்பு கொண்டார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பழகினர். இது கணவருக்கு தெரிந்ததால் கணவரை பிரிந்து மகன், மகளுடன் வைரமணி ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பால்காரத்தெரு காண்ட்ராக்டர் ஜெய்கணேஷ் வீட்டில் வாடகைக்கு 2017 மே 27ல் குடிவந்தார். வைரமணி வீட்டிற்கு வந்த வழக்கறிஞர் காளிதாஸ், 9ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்தி விட்டு, ஏன் தற்போது வீட்டிற்கு வரக்கூடாது.' என கேட்டு தகராறில் ஈடுபட்டார். இது பற்றி அறிந்த வீட்டின் உரிமையாளர் ஜெய்கணேஷ் காளிதாஸிடம் காலையில் பேசிக் கொள்ளலாம்.' எனக் கூறி அனுப்பி வைத்தார். வைரமணி போலீசில் புகார் அளிக்க சென்ற போது, காளிதாஸ் மீண்டும் தகராறு செய்தார். அதை தட்டிக்கேட்ட வீட்டின் உரிமையாளர் ஜெய்கணேஷ், அவரது நண்பர்கள் வெங்கடேஷ், பாண்டி ஆகிய மூவரையும் கத்தியால் குத்தி, வழக்கறிஞர் கொலை மிரட்டல் விடுத்து தப்பினார். ஜெய்கணேஷ் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கறிஞர் காளிதாஷை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அரசு வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார். நேற்று விசாரணை முடிந்து குற்றவாளி வழக்கறிஞர் காளிதாஷூக்கு 2 ஆண்டுகள் சிறை, 2 ஆயிரம் அபராதம், கட்டத்தவறினால் ஆறு மாத சிறை தண்டனை வழங்கி, நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.