/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
/
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : நவ 22, 2024 05:13 AM
தேனி: தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக் குழுவின்ஆலோசனையின் படி ஒசூர் வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற வளாகத்தின் அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.21 (நேற்று), நவ.22 இன்று நீதிமன்ற பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.
இதனால் லட்சுமிபுரம் நீதிமன்ற வளாகத்தில்உள்ள நீதிமன்றங்களின் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டன. மேலும் மாவட்ட தாலுகா, மாஜிஸ்திரேட் நீதிமன்ற வழக்கமான பணிகளும் பாதிக்கப்பட்டன.
லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலமுருகன், செயலாளர் செல்வக்குமார், இணைச் செயலாளர்லோகநாதன், துணைச் செயலாளர் மகாலிங்கம், மூத்த வழக்கறிஞர்கள் கணேசன், முடியரசு, கார்த்திகேயன், பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, கண்டன கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
போடி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த வக்கீல் கண்ணன் அரிவாளால் வெட்டப் பட்டதை கண்டித்தும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும் போடியில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கோர்ட் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் கோபிநாத், இணை செயலாளர்கள் பாண்டியராஜ், குமார், மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.