/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கி தொகுதியில் வக்கீல்கள் போட்டி
/
இடுக்கி தொகுதியில் வக்கீல்கள் போட்டி
ADDED : மார் 19, 2024 05:47 AM

மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதி பல்வேறு சிறப்புகளுடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேரளாவில் தமிழக எல்லையோரம் உள்ள இடுக்கி லோக்சபா தொகுதி மாநிலத்தில் ஏழு சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மிகப் பெரிய தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது.
இத்தொகுதியில் இடது சாரி, ஐக்கிய ஜனநாயகம், பா.ஜ., ஆகிய கூட்டணிகள் சார்பில் வக்கீல்கள் போட்டியிடுவது, மாநிலத்தில் 'சிட்டிங்' எம்.பி.யும், முன்னாள் எம்.பி.யும் மோதுவது என தொகுதி பல்வேறு சிறப்பு பெற்றவை.
வக்கீல்: தற்போது காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் 'சிட்டிங்' எம்.பி. டீன் குரியாகோஸ், இடது சாரி கூட்டணியில் ஜாய்ஸ்ஜார்ஜ், பா.ஜ., கூட்டணியில் சங்கீதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் மூவரும் வக்கீல்கள்.
டீன்குரியாகோஸ், ஜாய்ஸ்ஜார்ஜ் ஆகியோர் இடுக்கி மாவட்டத்தையும், சங்கீதா திருச்சூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரைச் சேர்ந்த சங்கீதா கடந்த சட்டசபை தேர்தலில் இடுக்கி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
மூன்றாம் முறை: டீன்குரியாகோஸ், ஜாய்ஸ்ஜார்ஜ் ஆகியோர் மூன்றாவது முறையாக மோதுகின்றனர்.
இருவரும் 2014ல் போட்டியிட்ட போது ஜாய்ஸ்ஜார்ஜ் வெற்றி பெற்றார். 2019ல் டீன்குரியாகோஸ் 1,71,053 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
மாநிலத்தில் மிகப்பெரிய தொகுதி, முன்னணிகள் சார்பில் வக்கீல்கள் போட்டி, சிட்டிங், முன்னாள் எம்.பி.,க்கள் மோதுவது என பல்வேறு சிறப்புகளுடன் லோக்சபா தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

