ADDED : நவ 13, 2024 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கன்னியாகுமரியில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்தும், பணிபாதுகாப்பு சட்டம் இயற்ற் கோரியும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வக்குமார், நிர்வாகிகள் பாலாஜி, கணேசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.