ADDED : ஆக 03, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மற்றொரு வழக்கறிஞர் ரகுமார் மீது தாக்குதலை கண்டித்தும் தேனி மாவட்ட நீதிமன்றம் முன் தேனி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். தலைவர் செல்வன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும் வலியுறுத்தினர்.