நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சவுண்டீஸ்வரி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கற்றல் கண்காட்சியை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜா முருகன், சம்பூர்ணப்பிரியா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பள்ளித் தலைவர் ஜெகஜோதி, செயலாளர் ராமசுப்பிரமணியன், தலைமையாசிரியர் சதீஸ்குமார் முன்னிலை வகித்தனர்.
கற்றல், கற்பித்தல் மாதிரி கண்காட்சிகள் பாட வாரியாக அமைக்கப்பட்டு இருந்தன. அறிவியல் தொடர்பான மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செங்கல் தயாரித்தல், லோக்சபா கட்டடம் வடிவமைத்தல் இடம்பெற்றன. கண் காட்சியினை போடியில் உள்ள ஆரம்ப, நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டனர்.

