/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே மனம் திறக்கும் மாணவர்கள்
/
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே மனம் திறக்கும் மாணவர்கள்
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே மனம் திறக்கும் மாணவர்கள்
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே மனம் திறக்கும் மாணவர்கள்
ADDED : பிப் 20, 2025 06:10 AM

வளர்ச்சிக்கு உதவும்
-முகமது அஸ்லாம்
தேனி
இனிவரும் எதிர்காலத்திற்கு பல மொழிகளை கற்பது அவசிய தேவையாக உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையானது 23 மொழிகளை அவரவர் விருப்பப்படி கற்றுக்கொள்ள மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு. இதில் தாய்மொழி சிதையும் என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புதுச்சேரியில் இந்த நிலைமை இல்லை. புதுச்சேரி முழுவதுமே என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. எங்கள் வகுப்பில் நடந்த கலந்துரையாடல் மூலம் எனக்கு தெரிந்தது. அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விபரக்குறிப்பு அளித்தனர். மத்திய அரசின் பாடத்திட்டம் தமிழகத்தில் அமலானால் என்னைப்போன்ற மாணவர்களுக்கு பிற, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் உலகளாவிய அறிவை,பெற்று, வளர்ச்சி அடைய முடியும்.
தமிழ் அழிந்துவிடும் என்பது கட்டுக்கதை
-எஸ்.முத்துலக்ஷ்ணாஸ்ரீ
தேனி
தேசிய கல்வி கொள்கை பாடத்திட்டத்தில் விரும்பிய மொழிகளை கற்றால் பட்டப்படிப்பு முடித்து வெளி மாநிலங்களில் பணியாற்றும் போது தொடர்பு திறன் வளர்ந்து எளிதாக நம்மால் பேச முடியும். வெளிநாடுகளில் ஆங்கில மொழியில் பேசலாம். மொழி ஆளுமை கிடைக்கும். இதற்கு மாறாக தமிழ் மொழி அழிந்துவிடும் என்ற கட்டுக்கதைகளை என்னைப்போன்ற மாநில பாடத்திட்ட மாணவர்கள் நம்ப மாட்டோம். மத்திய கல்வி கொள்கை அமலானால் விரும்பிய மொழியை படித்து முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.
மூன்றாவது மொழி அவசியம்
-அபர்ணா
கம்பம்
மூன்றாவதாக ஒரு மொழியை கற்பதால் அறிவை வளர்த்து கொள்ள வாய்ப்பு. அந்த மொழியின் இலக்கண இலக்கியங்களை தெரிந்து கொள்ள முடியும். அந்த மொழி பிரபலமாக உள்ள பகுதிகளுக்கு எளிதில் சென்று வரலாம். பல மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது தான். கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றால் தான் அதில் ஏதோ விஷயம் இருக்கிறது எனலாம். எந்த மொழியையும் நீங்கள் தேர்வு செய்து, மூன்றாவது மொழியாக கற்கலாம் என்பதில் தவறு இல்லை. படிக்க படிக்க தான் அறிவு வளரும். எனவே மூன்றாவது மொழி படிப்பது சி.பி.எஸ்.சி., மாணவியான எனக்கு விருப்பமே.
வெளிமாநில தொடர்பிற்கு ஹிந்தி அவசியம்
-சந்தோஷ்
கூடலுார்
தமிழ், ஆங்கிலத்தை தவிர மூன்றாவது மொழியாக அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் ஹிந்தி உள்ளது. வெளிமாநில தொடர்புகளை அதிகம் ஏற்படுத்திக்கொள்ள அந்த மொழி அவசியமாகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளை எதிர் கொள்ளவும் தேவைப்படுகிறது. அதனால் மூன்றாவது மொழியை அவசியம் கற்கும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும். ஏராளமான மாணவர்கள் மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையே தற்போது உள்ளது. கல்வியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து புதிய மொழியை கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
போட்டி தேர்வுகள் எதிர்கொள்ள உதவும்
-ஹரிஷ் ராகவேந்திரன்
பெரியகுளம்
-தேசிய கல்வி கொள்கையை வரவேற்கிறேன். புதிய மொழி 'கற்றல்' மாணவர்கள் வளர்ச்சிக்கு முக்கியமானது. மூன்றாவது மொழியான ஹிந்தி படித்ததால் அனைத்து அரசு போட்டி தேர்வுகளிலும் எதிர்கொள்ள வசதியாக இருக்கும். பள்ளி விடுமுறையில் பெங்களூருவில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு அனைவரும் சாதாரணமாக ஹிந்தியில் பேசினர். அப்போது பள்ளியில் நான் கற்றுக்கொண்ட ஹிந்தி பேசுவதற்கு உதவியது. அப்போது தான் அதன் அருமை புரிந்தது. தமிழ்நாட்டை கடந்து சென்றால் பெரும்பாலான மாநிலங்களில் ஹிந்தி பேசுகின்றனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி எனக்கு தெரிவதால் மேற்படிப்பு படிப்பதற்கு தன்னம்பிக்கையுடன் என்னை தயார் செய்து வருகிறேன்.
மத்திய அரசு துறைகளில் வாய்ப்பு பெறலாம்
-சஞ்சய் குமார்
போடி
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்றாவது மொழி கொண்டு வருவது வரவேற்க தக்கதாகும். இதன் மூலம் வெளி மாநிலங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கவும், கல்வித்திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் மூன்றாவது மொழி பயன் உள்ளதாக அமையும். ராணுவம், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்கிடவும் ஹிந்தி படிப்பது நல்லது. இதனால் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் இளைஞர்கள் பயன் பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற மூன்றாவது மொழி தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும்.

