/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் இடதுசாரி கூட்டணி 3ம் முறையாக ஆட்சி அமைக்கும்; இந்திய கம்யூ., மாநில செயலாளர் ஆரூடம்

ADDED : ஏப் 27, 2025 06:56 AM
மூணாறு : கேரளாவில் இடதுசாரி கூட்டணி மூன்றாம் முறையாக ஆட்சி அமைக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பினோய்விஸ்வம் தெரிவித்தார்.
மூணாறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேவிகுளம் மண்டல மாநாடு நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
மூணாறில் நேற்று நடந்த பிரதிநிதிகள் மாநாட்டை கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய்விஸ்வம் துவக்கி வைத்தார். பீர்மேடு எம்.எல்.ஏ. வாழூர் சோமன், இந்திய கம்யூ., மாநில குழு உறுப்பினர்கள் அஸ்ரப், அவுசேப், மாவட்ட செயலாளர் சலீம்குமார், மாவட்ட துணை தலைவர் பழனிவேல், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் குருநாதன், மண்டல செயலாளர் சந்திரபால் உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது மாநில செயலாளர் பினோய் விஸ்வம் பேசியதாவது: காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய செயலை மன்னிக்க இயலாது. பயங்கரவாதத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம். கேரளாவில் இடதுசாரி கூட்டணி மூன்றாம் முறையாக ஆட்சி அமைக்கும்.
கேரளாவை வறுமை இல்லாத மாநிலமாக மாற்றுவது இடதுசாரி கூட்டணி அரசின் நோக்கம் என்றார். மாநாடு இன்று நிறைவு பெறுகிறது.