/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு, கண்காட்சி
/
சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு, கண்காட்சி
ADDED : நவ 22, 2024 05:22 AM
தேனி: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில், புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம், புகைப்படக் கண்காட்சி நடந்தது.
இதனை முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டார். எஸ்.பி., சிவபிரசாத், மாவட்ட நீதிபதிகள் அனுராதா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி, நீதிபதிகள் சரவணன், ரஜினி, கணேசன், கோபிநாதன், கீதா, கண்ணன், மாஜிஸ்திரேட் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதன்மை மாவட்ட நீதிபதி பேசியதாவது: சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் சார்ந்த பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்லுாரி மாணவர்களுக்கும் சட்டம் சார்ந்த புரிதல்களை ஏற்படுத்த அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து நீதிமன்ற செயல்பாடுகள் விளக்க வேண்டும்,என்றார்.
மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, பயிற்சி கலெக்டர் டினுஅரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். புகைப்பட கண்காட்சியை வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், பள்ளிக் கல்லுாரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.