தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ரோட்டில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி

ரோட்டில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி

ரோட்டில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி


UPDATED : அக் 13, 2026 07:31 PM

ADDED : அக் 13, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 07:31 PM ADDED : அக் 13, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: பீர்மேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை குட்டி உயிரிழந்து கிடந்தது.

கேரளா பீர்மேடு அருகே குட்டிக்கானம்- மேமலை ரோட்டில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை குட்டி இறந்து கிடந்தது. அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தை குட்டியின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக தேக்கடி ராஜீவ் காந்தி அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மோதிய வாகனம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். குட்டி இறந்து கிடந்ததால் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் சிறுத்தையின் கண்காணிப்பை தீவிர படுத்துவதற்காக வனத்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us