ADDED : மே 18, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டி கொடைக்கானல் ரோடு டம்டம் பாறை செல்லும் வழியில் 'புலிப்புடவு' காப்புக்காடு பகுதி உள்ளது.
நேற்று அதிகாலை ரோட்டை கடக்க முயன்ற 10 மாத பெண் சிறுத்தை குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானது. அப்பகுதியினர் ரேஞ்சர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, பண்ணைக்காடு கால்நடை டாக்டர் நவீன், ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை டாக்டர் விஜயராகவன் சிறுத்தை குட்டி உடலை உடற்கூராய்வு செய்தனர். அடையாளம் தெரியாத வாகனத்தை தேவதானப்பட்டி வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
--