/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழக, கேரள வன எல்லையான மேகமலையில் சிறுத்தை பலி
/
தமிழக, கேரள வன எல்லையான மேகமலையில் சிறுத்தை பலி
ADDED : ஆக 16, 2025 02:56 AM
கம்பம்: மேகமலை வன உயிரின சரணாலயமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், மேகமலையை இணைந்து ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. புலிகள் காப்பகமாக மாறிய பின் வனத்துறையின் நடவடிக்கையால் வன உயிரினங்களை வேட்டையாடுவது குறைந்தது. அதன் எண்ணிக்கையும் அதிகரித்தது. குறிப்பாக சிறுத்தைகள் அதிகமாக உள்ளது.
நேற்று காலை சின்னமனூரிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள மேல் மணலாறு பகுதியில் வட்டப்பாறை என்னும் இடத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதை - ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்யப்பட்டது. தமிழக கேரள வனப் பகுதிகள் சந்திக்கும் இடமாகும். இது தொடர்பாக விசாரித்த போது, ' சிறுத்தை இறப்பிற்கான காரணம் அறிய அதன் உடல் பாகங்களை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்ப உள்ளோம். அதன் முடிவுகள் வந்த பின்பே இறப்பிற்கான காரணம் தெரிய வரும்,' என்றனர்.