/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
2 கன்றுக்குட்டிகளை கொன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
/
2 கன்றுக்குட்டிகளை கொன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
2 கன்றுக்குட்டிகளை கொன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
2 கன்றுக்குட்டிகளை கொன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
ADDED : ஏப் 14, 2025 06:17 AM
தேவதானப்பட்டி: காமக்காபட்டி பகுதியில் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த இரு கன்றுக்குட்டிகளை அடுத்தடுத்த நாட்களில் சிறுத்தை கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டி பகுதியில் ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை தொடர்ச்சியாக நாய்கள், கன்றுக்குட்டிகளை கடந்த மாதம் துவக்கம் முதல் வேட்டையாடி வருகிறது. வனத்துறை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
வனத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் 15 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த கண்ணனின் காமக்காபட்டி தோட்டத்தில் கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்றது.
இந்நிலையில் நேற்று மீண்டும் அதே பகுதியில் பரசுராமபுரத்தைச் சேர்ந்த கண்ணன் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்றது. இதனால் காமக்காபட்டி பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

