/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுத்தை நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்
/
சிறுத்தை நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்
ADDED : ஜூலை 16, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு; மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் புலி, சிறுத்தை ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றிடம் சிக்கி பசுக்கள் இறப்பது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நகர் அருகே இக்கா நகர் பகுதியில் கேரள மின் வாரியம் அலுவலகம் பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிந்து இருந்தது.
அதனை மின்வாரிய அலுவலக காவலர் சேகர் நேற்று காலை பார்த்தார். அது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
நகர் அருகே சிறுத்தை கால் தடம் காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.