ADDED : ஜன 31, 2025 12:09 AM

ஆண்டிபட்டி; தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு நடந்தது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். நர்சிங் கல்லூரி மாணவிகள்,டாக்டர்கள் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொழு நோயாளிகளுக்கு ஊன்றுகோல், காலணி, கண்ணாடி, மருத்துவப் பொருட்கள், போர்வைகள் வழங்கப்பட்டன.
நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமரன், உதவி நிலை மருத்துவ அலுவலர் டாக்டர் மணிமொழி, தோல் நோய் பிரிவு துறை தலைவர் டாக்டர் உமா, உதவி பேராசிரியர்கள் அமுதா, பிரித்விராஜ், தொழுநோய் திட்ட துணை இயக்குனர் அலுவலக நல கல்வியாளர்கள் தர்மேந்திர கண்ணா, வெங்கடேஸ்வரன் பாண்டி, சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திர பூபதி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முருகமணி செய்திருந்தார்.

