/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் 2022யை விட 2023ல் பெய்த மழையளவு குறைவு; கடந்த ஆண்டிலும் வடகிழக்கு பருவமழை அதிகம்

ADDED : ஜன 13, 2024 04:25 AM
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாவட்டமாகவும். கேரளாவில் தென்மேற்குபருவ மழை துவங்கும் போது தேனி மாவட்டத்திலும் சாரல் மழை துவங்கி விடும். மாவட்டத்தில் 2021ல் 1709.17 செ.மீ., மழையும், 2022ல் 1558.58 செ.மீ., மழையும், 2023ல் 1403.07 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 2023ல் மழை குறைவாக பெய்துள்ளது. மேலும் கடந்தாண்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக முல்லைப்பெரியாறு அணையில் 192.86 செ.மீ., பெரியகுளத்தில் 146.22 செ.மீ., சோத்துப்பாறையில் 144.09 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக உத்தமபாளையம், கூடலுாரில் தலா 42 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.மழையினால் 340 வீடுகள் பகுதி சேதமும், 10 வீடுகள் முழு சேதமும், கான்கீரிட் வீடுகள் 16 என மொத்தம் 366 வீடுகள் சேதமடைந்தன. பெரியகுளம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த இருவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். ஆண்டிப்பட்டியில் 4 பசுக்கள் உயிரிழந்தன. வீடுகள் சேதம், உயிர் சேதத்திற்கு பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் ரூ. 11.92 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டின் இயல்பு மழையாக குளிர்காலத்தில் 53.9 செ.மீ., கோடையில் 222.7 செ.மீ., தென்மேற்கு 170.8.செ.மீ., வடகிழக்கு 382.04 செ.மீ., என ஆண்டின் இயல்பு மழை 829.80 செ.மீ., கிடைக்க வேண்டும். குளிர்காலம் என்பது ஜன.,-பிப்.,, கோடை மார்ச்-மே, தென்மேற்கு பருவமழை ஜூன்-செப்.,, வடகிழக்குபருவமழை அக். முதல் டிச.,வரையான கால அளவாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இயல்பு மழையை விட மாவட்த்திற்கு கூடுதல் மழை பெய்துள்ளது.