/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென்னையில் கேரள வாடல் நோய் பாதிப்பை வரும் முன் காப்போம்
/
தென்னையில் கேரள வாடல் நோய் பாதிப்பை வரும் முன் காப்போம்
தென்னையில் கேரள வாடல் நோய் பாதிப்பை வரும் முன் காப்போம்
தென்னையில் கேரள வாடல் நோய் பாதிப்பை வரும் முன் காப்போம்
ADDED : மார் 03, 2024 06:23 AM
மாவட்டத்தில் தென்னை சாகுபடி பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்னையில் 40 நாட்களுக்கு ஒரு முறை வருவாய் கிடைக்கும் என்பதாலும், பெரிய அளவில் பராமரிப்பு செலவு ஏற்படாது, தினமும் கவனம் செலுத்தி பார்க்க வேண்டியதில்லை. இதுபோன்ற காரணங்களால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.
தென்னையை தாக்கும் நோய்களில் கேரள வாடல் நோய் முக்கியமானது. வாடல் நோய் பாதிப்பு ஏற்பட்டால் இலைகள் மஞ்சள் கலருக்கு மாறி காய்ப்பு திறன் படிப்படியாக குறையும். மரம் காய்ந்துவிடும். கேரள வாடல் நோய் காற்று மூலம் பரவுவதால் உடனடியாக அடுத்தடுத்த தோட்டங்களுக்கு பரவும். இப் பாதிப்பு ஏற்பட்ட மரங்களை வெட்டி தீ வைத்து எரித்து விட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாடல் நோய் பாதித்து வெட்டிய மரங்களுக்கு தலா ரூ.250 வீதம் நிவாரம் தென்னை வளர்ச்சி வாரியத்தால் வழங்கப்பட்டது. அதன் பின் அந்த நோய் பற்றிய தாக்கம் இல்லை.
தற்போது பொள்ளாச்சி பகுதியில் ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் கேரள வாடல் நோய் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் அம்பராம்பாளையம், தாத்தூர், ஆனைமலை போன்ற பகுதிகளில் தாக்கி உள்ளது. காற்றின் மூலம் வேகமாக பரவும் என்பதால் திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட அதிகாரிகளுக்கு வேளாண் துறை உஷார் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கம்பம், சின்னமனுார், போடி, பெரியகுளம் என பரவலாக தென்னை சாகுபடி இருப்பதால், வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை தென்னை விவசாயிகளுக்கு வழங்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

