/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி
/
மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி
ADDED : டிச 08, 2024 06:11 AM

கூடலுார் : நவீன உலகத்தில் கடிதத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாணவர்களுக்கு தபால் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடந்தது.
கூடலுார் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் தபால் துறை தேனி கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தலைமையில், போடி உபகோட்ட ஆய்வாளர் சதீஷ் முன்னிலையில் போட்டி நடந்தது. ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கடிதம் எழுதுவதற்காக மாணவர்களுக்கு இன்லேண்ட் லெட்டர் வழங்கப்பட்டது.
எழுதப்பட்ட கடிதங்கள் அனைத்தும் சென்னை அஞ்சல் துறை தலைவருக்கு அனுப்பப்படும். அதில் தேர்வு செய்யப்படும் முதல் மூன்று நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் வெங்கட்குமார், ஆசிரியர்கள் சீனிவாசன், சிக்கையன் உடன் இருந்தனர்.