/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எல்.ஐ.சி., முகவர்கள் பிரசார கூட்டம்
/
எல்.ஐ.சி., முகவர்கள் பிரசார கூட்டம்
ADDED : ஜூலை 06, 2025 04:16 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் எல்.ஐ.சி., நிறுவன பணியாளர்கள் மற்றும் முகவர்களின் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம்,அரசு போக்குவரத்து டெப்போ எதிர்ப்புறம் நடந்தது.
எல்.ஐ.சி., கிளை தலைவர் நாகபாண்டி தலைமை வகித்தார். நகர்நல செயலாளர் அன்புக்கரசன் பிரசாரத்தை துவக்கி வைத்தார். மதுரை கோட்ட சங்க தலைவர் சுரேஷ்குமார், இணை செயலாளர் ரமேஷ் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். கிளை மேலாளர் முத்துச்சாமி, வளர்ச்சி அலுவலர் மோகன்ராம் உட்பட பலர் பங்கேற்றனர். எல்.ஐ.சி., பணியாளர்கள் சுடர் கலைக்குழுவினர் தப்பாட்டம், பாடல்கள், வீதி நாடகம் நடந்தது. கிளை பொருளாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.
--