ADDED : செப் 28, 2024 02:54 AM

தேனி:தேனி அருகே மாமனாரின் பூர்விக சொத்தை மனைவிக்கு வழங்காத பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த முத்தீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உத்தமபாளையம் தாலுகா அனுமந்தன்பட்டி காவேரித் தெரு இருளாயி 65. இவரது தங்கை லட்சுமி 50. தம்பி நாகராஜ் 49. நாகராஜின் மகள் மலர்கொடி 23. இவருக்கும் அம்பலக்காரர் தெரு முக்தீஸ்வரனுக்கும் 26, திருமணம் நடந்தது.
மாமனாரின் பூர்வீக சொத்தில் தனது மனைவிக்கும் பங்கு கேட்டு, இருளாயிடமும், அவரது தங்கை லட்சுமியிடமும் முக்தீஸ்வரன் அடிக்கடி தகராறு செய்தார்.
அதன்பின் இருளாயி, லட்சுமி இணைந்து பூர்வீக சொத்தை விற்பனை செய்த தகவல், முக்தீஸ்வரனுக்கு தெரிந்தது.
தனது மனைவிக்கு பங்கு கிடைக்க வில்லை என்ற ஆத்திரத்தில் லட்சுமியின் வீட்டிற்கு முக்தீஸ்வரன் சென்றார். 2019 ஏப்., 24ல் இருளாயிடம், லட்சுமி பேசிக் கொண்டிருந்தார். முக்தீஸ்வரன் அரிவாளால் லட்சுமியை வெட்டிக் கொலை செய்தார். உத்தமபாளையம் போலீசார் முக்தீஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
முக்தீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார்.