ADDED : மே 28, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,: சென்னையில் அறம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது தேனி லைப் இன்னொவேஷன் பள்ளிக்கு வழங்கப்பட்டது. விருதினை பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா, பிரமுகர்கள் ஞானசம்மந்தன், பாஸ்கரன், நடிகர் பாலா ஆகிேயார் வழங்கினர்.
லைப் கல்வி குழும தாளாளர் நாராயணபிரபு கூறுகையில், மாவட்டத்தில் முதல் முறையாக ஏ.ஐ., தொழில் நுட்பத்துடன் கல்வி கற்பிக்கப்படுவதால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருது பெற துணை நின்ற பள்ளி முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கின்றேன்,' என்றார்.