/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்விரோதத்தில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
/
முன்விரோதத்தில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : அக் 28, 2025 04:18 AM

தேனி: உத்தமபாளையம்தாலுகா, ஆனைமலையான்பட்டியில் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பெட்டிக்கடையை அகற்றிய முன்விரோதத்தால் பாலு 52, என்பவரை வெட்டி கொலை செய்த, ஜாக்கிசானுக்கு 32, ஆயுள் தண்டனை விதித்து தேனி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனைமலையான்பட்டி வெள்ளைக் கரடு இந்திரா காலனி பாலு 52, மனைவி வேணி 48. இப்பகுதி குடிநீர் தொட்டி அருகே உள்ளஆதிதிராவிடகளுக்கு சொந்தமான இடத்தை ஆனைமலையான்பட்டியை சேர்ந்த கூல்பாண்டி 55, அவரது மனைவி ஈஸ்வரி 48. மகன்கள்ஜாக்கிசான் 32, சர்மா 30,ஆகிய நால்வரும் ஆக்கிரமித்து பெட்டிக்கடை நடத்தினர்.
இதற்கு பாலு எதிர்ப்பு தெரிவித்ததால் கூல்பாண்டி பெட்டிக்கடை அகற்றப்பட்டது. இதனால் கூல்பாண்டி உட்பட நால்வருக்கும் பாலு மீது விரோதம் ஏற்பட்டது.
கடந்த 2014 நவ.21ல் தெருவில் நடந்து சென்ற பாலுவை, ஜாக்கிசான் பின் தொடர்ந்து சென்று, அரிவாளால் கழுத்தில் வெட்டினார். ஜாதியை கூறி இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
சம்பவ இடத்திலேயே பாலு இறந்தார். மனைவி வேணிபுகாரில் ராயப்பன்பட்டி போலீசார் நால்வர் மீது கொலை, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
அரசு வழக் கறிஞர் இசக்கிவேல் ஆஜரானார்.
நேற்று விசாரணை முடிந்து நீதிபதி அனுராதா, குற்றவாளி ஜாக்கிசானுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் வழங்கி தீர்ப் பளித்தார்.
மற்ற மூவரும்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

