/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாட்டு வைத்தியர் கொலை உறவினருக்கு ஆயுள்
/
நாட்டு வைத்தியர் கொலை உறவினருக்கு ஆயுள்
ADDED : ஜூலை 19, 2025 01:35 AM

தேனி:தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரத்தில் குடும்ப பிரச்னையில் முன்விரோதம் காரணமாக நாட்டு வைத்தியர் சந்திரவேல் முருகன் 49, என்பவரை வெட்டிக் கொலை செய்த அதே ஊரை சேர்ந்த உறவினர்கள் நிஷாந்த்துக்கு 25, ஆயுள் தண்டனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மூத்த சகோதரர் நித்திஷ்குமாருக்கு 27, மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சந்திரவேல்முருகன் கூடலுாரில் எலும்பு முறிவுக்கான நாட்டு வைத்தியம் செய்தார்.இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். சின்ன ஓவுலாபுரத்தில் இருந்து கூடலுாருக்கு டூவீலரில் 2024 மே 2ல் சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் எரசக்கநாயக்கனுாரில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் மஞ்சள் நதி கண்மாய் அருகில் தண்ணீர் இல்லாத கிணற்றில் வைத்தியர் உடல் அரிவாளால் வெட்டப்பட்டு கிடந்தது.
போலீஸ் விசாரணையில் அவரது உறவினர் கவிசீலன் மகன்கள் நிஷாந்த், நிதிஷ்குமார் ஆகியோர் குடும்ப பிரச்னை முன்விரோதத்தில் அரிவாளால் வைத்தியரை வெட்டி கொலை செய்து உடலையும், டூவீலரையும் கிணற்றில் வீசிச் சென்றது தெரியவந்தது. வி.ஏ.ஓ., கல்யாணியிடம் இருவரும் சரணடைந்தனர்.
போலீசார் இவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
நிஷாந்த்திற்கு கொலைக்காக ஆயுள் தண்டனை ரூ.5 ஆயிரம்அபராதம், சாட்சிகளை மறைத்தற்காக 3 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், நித்திஷ்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார்.

