sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நீர் தேங்காத ஜம்புலிப்புத்துார் கண்மாய்

/

நீர் தேங்காத ஜம்புலிப்புத்துார் கண்மாய்

நீர் தேங்காத ஜம்புலிப்புத்துார் கண்மாய்

நீர் தேங்காத ஜம்புலிப்புத்துார் கண்மாய்


ADDED : ஆக 28, 2025 05:57 AM

Google News

ADDED : ஆக 28, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஜம்புலிப்புத்துார் கண்மாய்க்கு பல ஆண்டுகளாக நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. கண்மாயில் நீர் தேங்காததால் 5 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பாசன வசதியின்றி விவசாயம் பணிகள் கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் வேளாண் சாகுபடி பணிகளை தொடர முடியாத விவசாயிகள் மாற்றுத் தொழில் தேடி வெளியூர் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஐம்பது ஏக்கரில் நீர்தேக்கப் பரப்பை கொண்ட இக்கண்மாய் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் மலைப் பகுதியில் இருந்து நாகலாறு ஓடையில் வரும் தண்ணீர், ஆசாரிபட்டி அருகே பிரிக்கப்பட்டு இக்கண்மாய்க்கு திருப்பி விடப்படுகிறது. கண்மாயில் தேங்கும் நீரைப் பயன்படுத்தி ஜம்புலிபுத்துார், லட்சுமிபுரம் கிராமங்களில் 50 ஏக்கர் நேரடிப் பாசனம் செய்யப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்பட்டது. கண்மாயில் நீர் தேங்காததால் இப் பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதித்துள்ளது., என்றார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது நீராதாரங்கள் பாதிப்பு பி.ரத்தினம், முன்னாள் தலைவர், சண்முக சுந்தரபுரம் ஊராட்சி: கண்மாய் உருவாக்கப்பட்ட பின் ஒரு சில ஆண்டுகளில் மட்டுமே கண்மாய் நிரம்பி மறுகால் சென்றது. கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் சாகுபடி பணிகள் 6 மாதங்கள் நீடிக்கும். கண்மாயில் தேங்கும் நீரால் சண்முகசுந்தரபுரம், லட்சுமிபுரம், அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி, டி.வி.ரங்கநாதபுரம், ஸ்ரீரங்காபுரம் கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். இக்கிராமங்களில் விவசாயம் பாதித்ததால் கால்நடை வளர்ப்பு தொழிலும் பாதித்துள்ளது. தொழிலை கைவிட்ட விவசாயிகள் பலரும் மாற்றுத் தொழிலுக்காக வெளியூர் சென்று விட்டனர். மழைக் காலத்தில் வைகை ஆற்றில் இருந்து குன்னுார் கருங்குளம், செங்குளம் கண்மாய்களை நிரப்பிய பின், குன்னுார் வழியாக வைகை அணைக்கு நீர் சென்று வீணாகிறது. உபரியாக வைகை அணைக்குச் செல்லும் இந்த நீரை ஜம்புலிப்புத்துார், ரங்கசமுத்திரம் கண்மாய்களில் தேக்கி, பயன்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.

வற்றிவிடும் கண்மாய் நீர் ஆர்.ராமதாஸ், சண்முக சுந்தரபுரம்: பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் கண்மாய் புதர் மண்டி கிடக்கிறது. நாகலாறு ஓடையில் வரும் நீர் ஆசாரிபட்டி கண்மாய் அருகே பிரித்துவிடும் இடத்தில் உள்ள மதகு வழியாக குறைந்த அளவு நீரே ஜம்புலிப்புத்துார் கண்மாய்க்கு செல்கிறது. கூடுதலான நீர் ரெங்கசமுத்திரம் கண்மாய்க்கு செல்கிறது. தற்போது கண்மாயில் நீர் தேங்கினாலும், நீர் கசிவதால் சில மாதங்களில் வற்றி விடுகிறது. நீர் கசிவை சரி செய்யும் நடவடிக்கை இல்லை. கிழக்குப் பகுதியில் உள்ள மதகும் சேதம் அடைந்துள்ளது. நிலத்தடி நீர் பாதிப்பால் கண்மாயை நம்பி உள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒருபோகத்தில் பயிரிடுவதற்கே திண்டாடுகின்றனர். பெரியாறு அணை உபரி நீரை குள்ளப்பக் கவுண்டன்பட்டியில் இருந்து குழாய் மூலம் கொண்டு சென்று ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கண்மாய்களில் தேக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடுகின்றனர்.

அரசின் நடவடிக்கைதான் இல்லை. நாளுக்கு நாள் அழிந்து வரும் விவசாயம், கால்நடை வளர்ப்பை பாதுகாக்க இப்பகுதியில் அவசிய நடவடிக்கை தேவை., என்றார்.






      Dinamalar
      Follow us