/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு போட்டிகளில் லிங்கா குளோபல் பள்ளி சாம்பியன்
/
விளையாட்டு போட்டிகளில் லிங்கா குளோபல் பள்ளி சாம்பியன்
விளையாட்டு போட்டிகளில் லிங்கா குளோபல் பள்ளி சாம்பியன்
விளையாட்டு போட்டிகளில் லிங்கா குளோபல் பள்ளி சாம்பியன்
ADDED : செப் 14, 2025 04:05 AM
ஆண்டிபட்டி:மாவட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான வாலிபால் போட்டியில் ஆண்டிபட்டி லிங்கா குளோபல் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
மதுரை சஹோதயா பள்ளிக்கழகம் சார்பில் தேனி இன்னோவேசன் பள்ளியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு சி.பி.எஸ்.சி., மாணவர்களுக்கு நடந்த 18 வகையான போட்டிகளில் 8 பள்ளி மாணவர்கள் 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் லிங்கா குளோபல் பள்ளி மாணவர்கள் 150 பேர் கலந்துகொண்டு முதலிடம் பெற்றனர். வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை, சான்றிதழ்கள், மெடல்களை லிங்கா க்ளோபல் பள்ளி மாணவர்களுக்கு தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
மேரி மாதா பள்ளி முதல்வர் ரோபின் ஜாக்கப் சான்றிதழ்களை வழங்கினார்.
இரு போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பெற்ற மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம், ஆசிரியர்களை பள்ளி தலைவர் முனைவர் ஸ்ரீதரன், தாளாளர் டாக்டர் அறிவழகி, பள்ளி முதல்வர் சோனியா காந்தி ஆகியோர் பாராட்டினர்.