/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுபாட்டில் கடத்தியவர் டூவீலருடன் கைது
/
மதுபாட்டில் கடத்தியவர் டூவீலருடன் கைது
ADDED : ஜூன் 29, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த ஜெயராம் 47, தனது டூவீலரில் மதுபாட்டில்கள் கொண்ட சாக்கு மூட்டையுடன் வந்தார்.
அப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஓடைப்பட்டி எஸ்.ஐ , ரவி, டூவீலரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 551 மதுபாட்டில்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 77,140 ஆகும். ஜெயராம் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.