/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கரும்பு விவசாயிகளின் பட்டியல் இணை இயக்குநரிடம் ஒப்படைப்பு
/
கரும்பு விவசாயிகளின் பட்டியல் இணை இயக்குநரிடம் ஒப்படைப்பு
கரும்பு விவசாயிகளின் பட்டியல் இணை இயக்குநரிடம் ஒப்படைப்பு
கரும்பு விவசாயிகளின் பட்டியல் இணை இயக்குநரிடம் ஒப்படைப்பு
ADDED : டிச 31, 2024 06:46 AM
கம்பம்: பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதால் கொள்முதல் செய்வதற்கு கரும்பு விவசாயிகளின் பட்டியலை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு வேளாண் உதவி இயக்குநர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
தைப் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு பச்சரிசி, சர்க்கரை தலா ஒருகிலோ , முழு செங்கரும்பு வழங்கப்பட உள்ளது. செங்கரும்பை அந்தந்த மாவட்டங்களில் கொள்முதல் செய்ய அரசு அனுமதித்துள்ளது.
இந்தாண்டு கொள்முதல் செய்வதற்கு, சின்னமனூர், தேனி, பெரியகுளம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் கரும்பு விவசாயிகள் பட்டியலை தயார் செய்து தர வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் கோரியது. அதன்பேரில் வேளாண் உதவி இயக்குநர்கள் கரும்பு விவசாயிகளின் பட்டியலை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கலெக்டரின் ஆலோசனை பெற்று, கூட்டுறவு துறை அதிகாரிகள் வசம் பட்டியல் ஒப்படைக்கப்படும்.
கூட்டுறவு துறையினர் கொள்முதல் செய்தாலும், சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் கரும்பு தோட்டங்களில் ஆய்வு நடத்தி சான்றளிக்க வேண்டும். இன்னமும் சில நாட்களில் கரும்பு கொள்முதல் துவங்கும் எனத் தெரிகிறது.