/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழையால் கிடைத்த பசுந்தீவனம் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
/
மழையால் கிடைத்த பசுந்தீவனம் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
மழையால் கிடைத்த பசுந்தீவனம் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
மழையால் கிடைத்த பசுந்தீவனம் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
ADDED : அக் 26, 2024 06:59 AM

போடி: போடி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைத்து வருவதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
போடி பகுதியில் சில மாதங்களுக்கு முன் மழையின்றி கிணறுகளில் நீர் வற்றியதோடு, நிலத்தில் நீர்மட்டம் குறைந்து இருந்தது.
மழையை நம்பி இருந்த மானாவாரி விவசாய நிலங்கள் வறண்டது. கிடை ஆடுகள், மாடுகள் தீவனம், நீரின்றி தவித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் மேற்கொள்ள தயார் படுத்தி வருகின்றனர். நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி பயிரிட்டுள்ளனர். இதோடு நிலங்களில் செடிகள், புல் வகைகள் முளைத்து பசுமையாக உள்ளன. இதனால் காய்ந்த தீவனங்களை உண்டு வந்த கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைத்து உள்ளதால் கால்நடை வளர்ப்போர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கால்நடை வளர்ப்போர் கூறுகையில் : கடந்த சில மாதங்களாக மழை இன்றி கால்நடைகளுக்கு போதிய அளவு தீவனம் கிடைக்காமல் சிரமம் அடைந்தோம்.
தற்போது பெய்து வரும் மழையால் நிலங்களில் புல் செடிகள் வளர்ந்து பசுமையாக உள்ளதால் கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறை இல்லாமல் உள்ளது. இந்த மழையால் பெரிதும் ஆறுதல் அடைந்து உள்ளோம் என்றனர்.