/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூட்டுறவுத்துறையில் 8 மாதங்களில் ரூ.836 கோடி கடன் வழங்கல்
/
கூட்டுறவுத்துறையில் 8 மாதங்களில் ரூ.836 கோடி கடன் வழங்கல்
கூட்டுறவுத்துறையில் 8 மாதங்களில் ரூ.836 கோடி கடன் வழங்கல்
கூட்டுறவுத்துறையில் 8 மாதங்களில் ரூ.836 கோடி கடன் வழங்கல்
ADDED : டிச 23, 2024 05:39 AM
தேனி: 'மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் கடந்த 8 மாதங்களில் ரூ.836.68 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் 80, நகர கூட்டுறவு வங்கி 8, பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் 15, நகர கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட 120 சங்கங்கள் செயல்படுகின்றன. இதில் 88 சங்கங்கள் மூலம் நகை கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட 17 வகையான கடன் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
மாவட்டத்தில் கடந்த ஏப்.1 முதல் டிச.10 வரை நகைக்கடனாக ரூ.551 கோடி, பயிர்கடனாக ரூ.158 கோடி, கால்நடை பராமரிப்புக் கடனாக ரூ.37 கோடி, ஊழியர்களுக்கான ஊதிய கடன் திட்டத்தில் ரூ.37.5 கோடி, சுய உதவிக்குழு கடன்கள் ரூ.15.8 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கடன் திட்டங்களில் 97 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என, கூட்டுறவுத்துறையினர் தெரிவித்தனர்.