ADDED : ஜூலை 17, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: உத்தமபாளையம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவராக வக்கீல் சத்தியமூர்த்தி இருந்தார். அவர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து நேற்று வட்டார தலைவரை தேர்வு ஆலோசனை கூட்டம் உத்தமபாளையத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கம்பம் தொகுதி தலைவர் சிந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் முபாரக் வரவேற்றார். இதில் கோம்பை சீனிவாசராயர் வட்டார தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் நகர் தலைவர் கபார்கான் , பேச்சாளர் சிவமணி , தேனி நகர் நிர்வாகி கோபி, சின்னமனூர் வட்டார தலைவர் ஜீவா, பத்திர எழுத்தர் பரசுராமன், ராயப்பன்பட்டி பீட்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.