/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உள்ளாட்சிகள், நல்வாழ்வுத்துறை ஒருங்கிணைந்த... நடவடிக்கை தேவை: மழை தொடர்வதால் டெங்கு பரவும் அபாயம்

ADDED : ஜூலை 26, 2025 04:16 AM

கடந்த சில மாதங்களாக மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய்கள், குளங்கள், கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
தொடர் மழை காரணமாகவும், சீதோஷ்ண நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், வேளாண், தோட்டக்கலை பயிர்களில் நோய்கள் தாக்கி வருகின்றன. வரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வீதிகளில் மழை நீர் தேங்கி நிற்க துவங்கி உள்ளது. டயர்கள் , சிரட்டைகள், பழைய உடைந்த பாத்திரங்கள் என ரோட்டோரத்தில் நல்ல தண்ணீர் தேங்கி நிற்கிறது. நகரங்களை காட்டிலும் கிராமங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது அதிகரித்துள்ளது. இந்த வகை நீரில் தான் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் முட்டையிட்டு இன பெருக்கம் செய்யும். இதுவே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பாக மாறும்.
எனவே உள்ளாட்சி அமைப்புக்கள், வீதிகளில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத் துறையினரும் வீடுகளில் தண்ணீரை மூடி வைக்க அறிவுறுத்தி விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இரண்டு துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே இந்த பருவ மழை காலத்தில் டெங்குவின் பாதிப்பில் இருந்து பொது மக்களை காப்பாற்ற முடியும். மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.