/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கட்டடங்களில் காலாவதியான தீயணைப்பு கருவிகளை கவனியுங்க சார்: போலீஸ் ஸ்டேஷன்களில் 70 சதவீதம் புதுப்பிக்காத நிலை
/
கட்டடங்களில் காலாவதியான தீயணைப்பு கருவிகளை கவனியுங்க சார்: போலீஸ் ஸ்டேஷன்களில் 70 சதவீதம் புதுப்பிக்காத நிலை
கட்டடங்களில் காலாவதியான தீயணைப்பு கருவிகளை கவனியுங்க சார்: போலீஸ் ஸ்டேஷன்களில் 70 சதவீதம் புதுப்பிக்காத நிலை
கட்டடங்களில் காலாவதியான தீயணைப்பு கருவிகளை கவனியுங்க சார்: போலீஸ் ஸ்டேஷன்களில் 70 சதவீதம் புதுப்பிக்காத நிலை
ADDED : நவ 05, 2024 05:57 AM
தேனி: மாவட்டத்தில் வணிக வளாகங்கள், நிறுவனங்களில் போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுவப்பட்டுள்ள தீயணைப்பு சிலிண்டர்கள் காலாவதி தேதிக்கு பின்பும் பயன்பாட்டில் உள்ளது. இவற்றை உரிய நாட்களில் புதுப்பிப்பது அவசியம் என தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கட்டடங்களில் தீவிபத்து அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை தடுக்க குடியிருப்புகளில் 2 கிலோ உலர் கெமிக்கல் பவுடர் அடங்கிய தீ அணைப்பு சிலிண்டர்கள் ஒரு அறைக்கு ஒரு சிலிண்டர் வீதம் பயன்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் 300 சதுர மீட்டர் உள்ள பகுதிக்கு 4 கிலோ உலர் கெமிக்கல் பவுடர் கொண்ட தீ அணைப்பு சிலிண்டர் வைக்க வேண்டும். தொழிற்சாலைகளில் 1000 சதுர மீட்டர் உள்ள பகுதியில் 6 கிலோ உலர் கெமிக்கல் கொண்ட சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்பது பொதுவான விதிமுறை. இதனை வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தினமும், குடியிருப்புப் பகுதிகளில் வாரத்திற்கு ஒரு முறையும் சிலிண்டர்களை ஆய்வு செய்து இயங்கும் திறன், அதில் உள்ள வேதிப்பொருட்களின் திறனை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.
தீயணைப்புத்துறையினர் மாதம் ஒருமுறை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'தேனி மாவட்டத்தில் புதிய வணிக வளாக கட்டுமானங்கள் முடிந்த பின்பும், தீயணைப்பு சிலிண்டர் பொருத்துவதில் அலட்சியம் காட்டுகின்றனர்.
புதிய மருத்துவமனைகள், கல்லுாரிகள், பள்ளிகள், தேனியில் புது பஸ் ஸ்டாண்டில் இயங்கி வரும் தங்கும் விடுதிகள், பெரியகுளம், ஆண்டிபட்டியில் இயங்கும் சினிமா தியேட்டர்கள், 70 சதவீத போலீஸ் ஸ்டேஷன்களில் முறையாக தீயணைப்பு கருவிகள் புதுப்பிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கட்டடத்திற்கு உரியவர்கள் காலாவதியான தீயணைப்பான்களை மாற்றிவிட்டு புதிய தீ தடுப்பு கருவிகளை பொறுத்த வேண்டும்.
காலாவதி சிலிண்டர்கள் ஆய்வில் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் விதிக்கப்படும். இதனால் புதிய தீயணைப்பான்களை பொருத்தி வணிகர்கள், குடியிருப்பு கட்டடங்களில் உரிமையாளர்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்,' என்றனர்.

