/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மணல் திருடிய லாரி, டிராக்டர் பறிமுதல்
/
மணல் திருடிய லாரி, டிராக்டர் பறிமுதல்
ADDED : நவ 28, 2024 05:47 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி திருமலாபுரம் அருகே திருட்டு மணல் லாரியில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து க.விலக்கு எஸ்.எஸ்.ஐ., பால்பாண்டி மற்றும் போலீசார் திருமலாபுரம் விலக்கு அருகே வாகன சோதனையில் இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மணலுடன் சென்ற டிப்பர் மினி லாரியை நிறுத்தினர். டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக திருமலாபுரம் ஊருக்குள் ஓட்டி சென்று ரயில்வே கேட் அருகில் உள்ள காலி இடத்தில் மணலை கொட்டி விட்டு அங்கிருந்து மீண்டும் லாரியை எடுத்துக் கொண்டு சென்றார். பின் தொடர்ந்து சென்ற போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளார்.
அம்மச்சியாபுரம் கண்மாய் அருகில் லாரி டயர் சகதியில் சிக்கிக் கொண்டதால் டிரைவர் லாரியை அந்த இடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். லாரி மற்றும் மணலை பறிமுதல் செய்த போலீசார் மினி டிப்பர் லாரியை ஓட்டிச் சென்ற குன்னூரை சேர்ந்த பால்பாண்டி என்பவரை தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டி எஸ்.ஐ., ராஜசேகர் மற்றும் போலீசார் டி.சுப்புலாபுரம் அருகே ரோந்து சென்றனர். அப்பகுதி பொன்னகுளம் அருகே ஓடையில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த ராஜீவ்கௌதம் என்பதும், டிராக்டர் உரிமையாளர் பாலமுருகன் என்பதும் தெரிய வந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.