/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலி பாஸ் மூலம் எம்.சாண்ட் கொண்டு சென்ற லாரி பறிமுதல்
/
போலி பாஸ் மூலம் எம்.சாண்ட் கொண்டு சென்ற லாரி பறிமுதல்
போலி பாஸ் மூலம் எம்.சாண்ட் கொண்டு சென்ற லாரி பறிமுதல்
போலி பாஸ் மூலம் எம்.சாண்ட் கொண்டு சென்ற லாரி பறிமுதல்
ADDED : ஜன 30, 2025 06:24 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கனிமவளம் கொள்ளையில் ஈடுபட்ட கேரள டிப்பர் லாரியை சப் -கலெக்டர் ரஜத்பீடன் சோதனை செய்து வழக்கு பதிய உத்திரவிட்டார்.
திண்டுக்கல் தேனி ரோடு ஜல்லிபட்டி அருகே கேரள மாநிலம் பதிவெண் கொண்ட லாரி, எம்.சாண்ட் ஏற்றிச் சென்றது.
இதனை நிறுத்தி பெரியகுளம் சப்- கலெக்டர் ரஜத்பீடன் அனுமதிக்கான பாஸ்யை சோதனை செய்தார். ஒரு முறை கொண்டு செல்வதற்கு பாஸ் வாங்கிவிட்டு 'ஒயிட்னரில்' தேதி, நேரத்தை அழித்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தாமரைக்குளம் வி.ஏ.ஓ., கற்பகவள்ளி புகாரில், தென்கரை இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் 'கே.எல்.69. டி.8192' டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்.-