UPDATED : செப் 07, 2026 09:58 PM
ADDED : செப் 07, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி எஸ்.ஐ.,ரஞ்சித் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் இருந்தனர்.
தேனி மெயின் ரோட்டில் சக்கம்பட்டி பெட்ரோல் பல்க் அருகே சென்ற டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். லாரியில் அனுமதி சீட்டு இன்றி கிராவல் மண் கொண்டு செல்வது தெரிந்தது. லாரி டிரைவர் தப்பி சென்றார். கிராவல் மண் கொண்டு செல்வதற்கான அனுமதி ஏதும் இல்லாததால் 4 யூனிட் கிராவல் மண்ணுடன் போலீசார் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். லாரியின் பதிவு எண் மூலம் உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.
