/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் சக்கரம் ஏறி லாரி டிரைவர் காயம்
/
பஸ் சக்கரம் ஏறி லாரி டிரைவர் காயம்
ADDED : செப் 14, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:கருவேல்நாயக்கன்பட்டி லாரி டிரைவர் சின்னன் 37. இவரது மனைவி கனகவள்ளியை தேனி புது பஸ் ஸ்டாண்டில்
மதுரை செல்லும் தனியார் பஸ்சில் ஏற்றிவிட்டு அதே பஸ்சில் அமர்ந்து மனைவியிடம் பேசி கொண்டிருந்தார். பஸ் புறப்படும் போது சின்னன், பஸ் டிரைவர் தீபக்கிடம் கூறிவிட்டு இறங்கினார். அப்போது சின்னன் கீழே விழுந்ததில் பஸ்சின் பின் சக்கரம் ஏறியது.
இதில் கைவிரல்கள், இடுப்பு பகுதியில் சின்னன் காயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர். கனகவள்ளி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.