ADDED : பிப் 24, 2026 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே அரிசி ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் இருந்து அரிசி ஏற்றிய லாரி மூணாறுக்கு சென்றது. லாரியை கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த நிகில் 29, ஓட்டினார்.
மூணாறு டி.எஸ்.பி. குடியிருப்பு அருகே நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு லாரி சென்றது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட லாரி டிரைவர் முயன்றார். அப்போது பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.
விபத்தில் டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினார். இவ் விபத்து பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

