/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லாரி உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழா
/
லாரி உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழா
ADDED : ஏப் 14, 2025 05:59 AM
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழா நேற்று நடந்தது.
கம்பத்தில் நடந்த விழாவில் டாக்டர் கோபாலகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், முத்துலட்சுமி, டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பெரியகுளம் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிசாத் ரஹ்மான், கம்பம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் தலைவராக முகம்மது இர்பான், செயலாளராக பாண்டியராசு, பொருளாளராக வாஹித், துணைத் தலைவராக செல்வராஜ், துணைச் செயலாளராக கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் திரளாக லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் பங்கேற்றனர்.

