/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இலவம் பஞ்சு விலை குறைவு; விவசாயிகள் கவலை
/
இலவம் பஞ்சு விலை குறைவு; விவசாயிகள் கவலை
ADDED : ஏப் 30, 2025 06:41 AM
கூடலுார்; இலவம் பஞ்சு விலை கிலோவுக்கு ரூ.40 ஆக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
கூடலுாரில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் இலவம் விவசாயம் நடைபெறுகிறது. இலவம் பஞ்சு கிலோவுக்கு ரூ.40 முதல் 45 வரை உள்ளூர் வியாபாரிகள் வாங்குகின்றனர். விலை குறைவாக இருப்பதால் அறுவடை செய்யாமல் மரத்திலேயே இலவம் காய் காய்ந்து வெடித்து பஞ்சுகள் வீணாக உதிர்ந்த வண்ணம் உள்ளது.
விவசாயிகள் கூறும் போது:
கடந்த ஆண்டு கிலோவுக்கு ரூ.70 முதல் 80 வரை விலை இருந்தது. தற்போது ரூ40க்கு வாங்குவதால் எடுப்பு கூலி கூட கிடைப்பதில்லை. ஆண்களுக்கு ஒரு நாள் எடுப்புக்கூலி ரூ.1200 ஆகவும், பெண்களுக்கு ரூ.400ம் கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 90 கிலோ மட்டுமே பஞ்சு எடுக்க முடிகிறது. தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதை விட வருவாய் குறைவாக இருப்பதால் கூடுதலான மரங்களில் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டோம், என தெரிவித்தனர்.