/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூல வைகை ஆற்றில் குறைந்த நீர்வரத்து
/
மூல வைகை ஆற்றில் குறைந்த நீர்வரத்து
ADDED : ஜன 20, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு, வாலிப்பாறை, வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் வரும் நீர் வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனுார், அம்மச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணை சென்று சேருகிறது.
மலைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை இல்லை. ஏற்கனவே பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் வரும் நீர் படிப்படியாக குறைந்து வைகை அணைக்கு சென்று சேர்வது இல்லை. முல்லைப் பெரியாறுஅணையில் திறந்து விடப்படும் நீரில் குறிப்பிட்ட அளவு மட்டும் வைகை அணை சென்று சேர்கிறது.