/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காற்றாலையில் ரூ.10லட்சம் மதிப்பிலான இயந்திரம் திருட்டு
/
காற்றாலையில் ரூ.10லட்சம் மதிப்பிலான இயந்திரம் திருட்டு
காற்றாலையில் ரூ.10லட்சம் மதிப்பிலான இயந்திரம் திருட்டு
காற்றாலையில் ரூ.10லட்சம் மதிப்பிலான இயந்திரம் திருட்டு
ADDED : ஜன 12, 2025 07:13 AM
தேனி: தேனி அருகே காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள இயந்திரம் திருடு போனது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தேனி, ஆண்டிபட்டி, போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் அதிக அளவில் காற்றாலைக்கள் செயல்படுகின்றன. கோபாலபுரத்தில் இருந்து மூலவைகை ஆறு செல்லும் ரோட்டில் தனியார் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 10லட்சம் மதிப்புள்ள சி.சி.யு., என்ற இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. காற்றாலை நிறுவனத்தின் மேலாளர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அழகைநகர் லிங்கராசு 45, காற்றாலையை ஆய்வு செய்த போது சி.சி.யு., இயந்திரம் திருடு போயிருந்தது. புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.