/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரை காமராஜ் பல்கலை அணிகளுக்கு இடையே டேபிள் டென்னிஸ் போட்டி மதுரை அமெரிக்கன் கல்லுாரி முதலிடம்

ADDED : ஆக 15, 2025 02:38 AM

போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில், மதுரை காமராஜ் பல்கலைக் கழக அணிகளுக்கு இடையே நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.
மதுரை காமராஜ் பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான மேசைப் பந்தாட்ட போட்டி போடி சி.பி.ஏ., கல்லூரியில்கல்லூரி செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் போட்டியை துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் சிவா வரவேற்றார்.
பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, போடி சி.பி.ஏ., கல்லூரி, சாத்தூர் அரசு கலைக் கல்லூரி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி, சிவகாசி அய்ய நாடார் கல்லூரி, திண்டுக்கல் ஜி, டி. என். கல்லூரி, திருவேடம் விவேகானந்தா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதலிடமும், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி இரண்டாம் இடமும், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி மூன்றாம் இடம் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு போடி சி.பி.ஏ., கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், முதல்வர் சிவக்குமார் பரிசுகளை வழங்கினர்.