/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரை- போடி மின்சார ரயில் இன்று சோதனை ஓட்டம்
/
மதுரை- போடி மின்சார ரயில் இன்று சோதனை ஓட்டம்
ADDED : பிப் 02, 2025 04:01 AM
தேனி : மதுரையில் இருந்து போடி வரை ரயில்வே பாதை மின் மயமாக்கும் பணி நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று(பிப்.2) மதுரையில் இருந்து போடிக்கும், போடியில் இருந்து மதுரைக்கும் பகலில் மின்சாரத்தில் இயங்கும் ரயில் சோதனை ஓட்டம் நடக்கிது.
இந்த சோதனை ஓட்டம் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் நடக்கிறது. இதற்காக தண்டவாளங்களில் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின் வயர்களில் 25ஆயிரம் வோல்ட் மின்சாரம் செல்கிறது. எனவே பொதுமக்கள் தண்டவாளங்களை கடக்கும் போது உயரம் அதிகமான இரும்பு பொருட்கள், மரக்கிளை வெட்ட பயன்படும் அரிவாள், உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டாம். கவனமுடன் தண்டவளாத்தை கடந்து செல்ல ரயில்வே துறை அறிவுறுத்தி உள்ளது.