/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆர்த்ரோஸ்கோப்பி சிகிச்சையில் முன்னோடி மதுரை வேல் மருத்துவமனை
/
ஆர்த்ரோஸ்கோப்பி சிகிச்சையில் முன்னோடி மதுரை வேல் மருத்துவமனை
ஆர்த்ரோஸ்கோப்பி சிகிச்சையில் முன்னோடி மதுரை வேல் மருத்துவமனை
ஆர்த்ரோஸ்கோப்பி சிகிச்சையில் முன்னோடி மதுரை வேல் மருத்துவமனை
ADDED : அக் 13, 2024 05:25 AM
தேனி: ஆர்த்தோஸ்கோப்பி சிகிச்சை மூட்டினில் உள்ள பிரச்னைகளுக்கு இரு சிறு துளைகள் மூலம் தீர்வு காணும் சிகிச்சை ஆகும். குறைவான வலி, விரைவில் குணமடைதல், இயல்பு நிலைக்கு வேகமாக திரும்புதல் இச் சிகிச்சையின் நன்மைகள் ஆகும்.
இந்த தொழில்நுட்பம் மூட்டு பகுதியில் உள்ள நோய்களை கண்டறிய ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். இந்த சிகிச்சை மூலம் மூட்டில் உள்பகுதியை துல்லியமாக கேமரா மூலம் நம் கண்ணால் காண இயலும். இதனால் சிறு பிரச்னையும் முழுமையாக கண்டறிந்து முழு சிகிச்சை அளிக்க இயலும். இந்த சிகிச்சை அளிப்பதில் மதுரை வேல் ஆர்த்தோ மருத்துவமனை சிறந்து விளங்கி வருகிறது.இந்த மருத்துவமனையில் இயக்குனராக டாக்டர் சுப்பிரமணியன் உள்ளார். இவர் இங்கிலாந்தில் பயிற்சி, முதுநிலை ஆலோசகராக ஆர்த்தோஸ்கோப்பி சிகிச்சை பிரிவில்பணிபுரிந்தார். தற்போது இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்த்தோஸ்கோப்பிசிகிச்சை அளித்து வருகிறார். வேலம்மாள் மருத்துவமனையில் முதுநிலை ஆலோசகராகவும் உள்ளார்.
மதுரை வேல் ஆர்த்தோ மருத்துவமனை இயக்குனர் கூறியதாவது: ஆர்த்தோஸ்கோப்பி சிகிச்சை முதலில் முழங்கால் பிரச்சனையான ஜவ்வு கழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க மட்டும் பயன்பட்டது. தற்போது மூட்டு கீல் வாதம், நரம்பியல் மூட்டு வலி, முழுங்கை வலி, தோள் மூட்டின் சுற்றுப்பட்டை தசை கிழிதல் உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வு காண முடிகிறது. இந்த சிகிச்சையில் உடலில் உலோகமற்ற உள்வைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த சிகிச்சையின் அடுத்த கட்டமாகும். ஆர்த்தோஸ்கோப்பி சிகிச்சை மூலம் நோயின் தீவிரத்தை முழுமையாக அறிய முடியும். இந்த சிகிச்சை 6 வழிமுறைகள் பின்பற்றபடுகிறது. இது நோயாளிகள் முழு திருப்தியடைய உதவுகிறது. இந்த சிகிச்சை முறைபற்றி திறன் வாய்ந்த எலும்பு மூட்டு நிபுனர்கள் 48 பேருக்கு பயிற்சி வழங்கி உள்ளேன். இவர் நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆர்த்தோஸ்கோப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர். சர்வதேச, தேசிய ஆர்த்தோஸ்கோப்பி சிகிச்சை கழகங்களில் உறுப்பினராக உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் எலும்பு மூட்டு நிபுணர்களிடம் ஆர்த்தோஸ்கோப்பி விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தேசிய ஆர்த்தோஸ்கோப்பி கழகத்தில் 4ஆயிரம் நிபுணர்கள் இணைந்துள்ளனர். மருத்துவமனை அளிக்கும் பயிற்சி சர்வதேச ஆர்த்தோஸ்கோப்பி கழகத்தில் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் விபரங்களுக்கு மருத்துவமனையை 93442 46436 என்ற அலைபேசி எண்ணிலும், 0452 4367597 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.