/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் ஆக. 28,29,30ல் மதுரை மண்டல போட்டிகள்
/
தேனியில் ஆக. 28,29,30ல் மதுரை மண்டல போட்டிகள்
ADDED : ஆக 19, 2025 12:42 AM
தேனி; தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மதுரை மண்டல கூடைப்பந்து, டென்னிஸ் போட்டிகள் ஆக.,28,29,30ல் நடக்கிறது. இதில் 5 மாவட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
தேசிய அளவில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழும போட்டிகள்(SGFI) நடத்தப்படுகிறது. போட்டிகள் மாணவர்கள், மாணவிகள் பிரிவில் 14,17,19 வயதிற்குட்பட்டு நடத்தப்படுகிறது. தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆக.,28 ல் டேபிள் டென்னிஸ், ஆக.,29,30ல் கூடைப்பந்து போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
கல்வித்துறையினர் கூறுகையில், 'தமிழகத்தில் 8 மண்டலங்கள் உள்ளன. மண்டல அளவிலான போட்டியில் தேர்வாகும் வீரர்கள் மாநில போட்டியில் பங்கேற்பார்கள். அதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்,' என்றனர்.

