/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேச்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா
/
பேச்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா
ADDED : செப் 15, 2025 05:51 AM
சின்னமனுார் : சின்னமனுார் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள பேச்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், தொடர்ந்து கடம் புறப்பாடு ஆகி, மூலவர் விமானம், பேச்சி யம்மன், அங்காள பரமேஸ்வரி, ராக்காயி அம்மன், பரிவார தெய்வங்கள், கருப்பணசாமி, கற்பக விநாயகர் திருக்கோயில்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் பட்டர் சீனிவாசன் செய்தார்.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், இளைஞர் ஒருங்கிணைப்பு குழுவினரும் செய்திருந்தனர்.