/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மக்காச்சோளம் டன் ரூ. 23,750க்கு ஏலம்
/
மக்காச்சோளம் டன் ரூ. 23,750க்கு ஏலம்
ADDED : ஜன 10, 2025 05:28 AM
தேனி: தேனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த இ-நாம் ஏலத்தில் கொப்பரை தேங்காய், எள், குதிரைவாலி, மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டன.
கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ. 151க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.105க்கு விற்பனையானது. மொத்தம் 1052.3 கிலோ கொப்பரை தேங்காய் ரூ.1.40லட்சத்திற்கு விற்பனையானது. 6 மெட்ரிக் டன் மக்காச்சோளம் விற்பனைக்கு வந்தது. ஒரு டன் (1000 கிலோ) ரூ. 23,750 வீதம் ரூ. 1.45லட்சத்திற்கு ஏலம் போனது. விவசாயிகள் தங்கள் வேளாண் விளை பொருட்களை இ-நாம் முறையில் விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனை நிலையம், அல்லது கண்காணிப்பாளரை 99766 30746 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கண்காணிப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.