/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மக்காச்சோளம் டன் ரூ. 24ஆயிரத்திற்கு ஏலம்
/
மக்காச்சோளம் டன் ரூ. 24ஆயிரத்திற்கு ஏலம்
ADDED : பிப் 05, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் மட்டைத்தேங்காய், கொப்பரை, வேளாண் விளை பொருட்கள் ஏலம் நடக்கிறது. கடந்த வாரம் 5 விவசாயிகள் மக்காச்சோளம் 23 டன் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். விற்பனைக்குழு செயலாளர் ராஜா தலைமையில் ஏலம் நடந்தது. ஏலத்தில் மக்காச்சோளம் அதிகபட்சம் கிலோ ரூ. 24.01க்கும் குறைந்த பட்சம் ரூ.23.16க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ.23.87க்கு விற்பனை செய்யப்பட்டது.
23 மெட்ரிக் டன் மக்காச்சோளம் ரூ.5.70 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு டன் ரூ.24 ஆயிரம் வரை ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகலாம் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.