/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மக்காச்சோளம் கிலோ ரூ. 24.86க்கு ஏலம்
/
மக்காச்சோளம் கிலோ ரூ. 24.86க்கு ஏலம்
ADDED : ஏப் 25, 2025 07:04 AM
தேனி: தேனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்கள் இநாம் முறையில் ஏலம் விடப்படுகிறது. நேற்று அதிகபட்சமாக கடலை ரூ. 60க்கும், மக்காச்சோளம் ரூ.24.86க்கும் விற்பனையானது.
மாவட்டத்தில் விளையும் தேங்காய், கொப்பரை, மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்கள் உள்ளூர், வெளியூர் வியாபாரிகளுக்கு இ-நாம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பொருட்களை கிடங்குகளில் வைத்து பொருளீட்டு கடன் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடந்த ஏலத்திற்கு நிலக்கடலை 570 கிலோ, மக்காச்சோளம் 4.6டன் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலை கிலோ ரூ.60 விலையில் ரூ. 34,200க்கு விற்பனையானது. மக்காச்சோளம் கிலோ ரூ.24.86 விலையில் ரூ. 1,14,977க்குள் விற்பனையானது. வேளாண் பொருட்களை இநாம் முறையில் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தேனி பெரியகுளம் ரோட்டில் சுக்குவாடன்பட்டியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தை நேரில் அணுகலாம். அல்லது 99766 30746 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.